டெங்கு கொசு : ஆளும் கட்சி பிரமுகருக்கு அபராதம்

திருவாரூர்

டெங்கு கொசு உற்பத்தி ஆகும் படி வீட்டில்நீர் தேங்கி இருந்த்தால் அதிமுக பிரமுகருக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கபட்டது.

திருவாரூர் நகரில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க ஆய்வுப்பணி நடைபெற்றுவருகிறது. மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி தலைமையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. டெங்கு கொசுக்கள் மற்றும் புழுக்கள் உருவாகும் படி நீர் தேங்கி உள்ள இடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அவ்வாறு நடந்த சோதனையில் அதிமுக பிரமுகர் பன்னீர்செல்வம் வீட்டில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்கி இருந்துள்ளது. இதை ஒட்டி அவருக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.

அதிமுகவின் மாவட்ட பொருளாளரான பன்னீர் செல்வம் அரசுத் துறையில் பல  பணிகளை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர் ஆவார்.