இஸ்லாமுக்கு எதிரான வார்த்தைகள் உபயோகிக்க சீனாவில் தடை..

பீஜிங்

மூக தளங்களில் இஸ்லாமுக்கு எதிரான வார்த்தைகளை உபயோகிக்க சீன அரசு தடை விதித்துள்ளது.

சமீபத்தில் சீனாவின் டாங்க்‌ஷான் நகரத்தில் இஸ்லாமியர்களை பாரபட்சமாக நடத்துவதாக புகார் எழுந்தது.  அப்போது இணையதளங்களில் இஸ்லாத்துக்கு எதிரான வார்த்தைகள் பரவலாக உபயோகிப்பட்டதாகவும் கூறப்பட்டது.  ஏற்கனவே சீன அரசு ஏற்கனவே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், கூகுள் போன்றவைகளுக்கு சீன நாட்டில் தடை விதித்துள்ளது.  இதனால் இஸ்லாமியர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.  சிறுபான்மையினருக்கு எதிராக சீன அரசு நடந்துக் கொள்வதாக ஐயமும் எழுந்தது.

தற்போது சீன அரசு அவர்களின் பயத்தை போக்கும் அளவில் சமூக வலைதளங்களில் இஸ்லாமுக்கு எதிரான வார்த்தைகள் உபயோகிப்பதை முழுமையாக தடை செய்துள்ளது.  இஸ்லாத்துக்கு எதிரான வார்த்தைகள் என சிலவற்றைக் கண்டறிந்து சீன அரசின் தொழில்நுட்பத் துறை இணையத்தில் பதிந்துள்ளது.  அந்த வார்த்தைகளை சீனாவில் இருந்து யாரும் பதியாத வகையிலும்,  அந்த வார்த்தைகள் இடம் பெற்ற பதிவை சீனாவில் யாரும் பார்க்க முடியாத படியும் தொழில்நுட்பத்தை சீன அரசு மாற்றி அமைத்துள்ளது. சமூக ஆர்வலர்கள் சிலர் இது தங்களின் எழுத்துரிமையை பாதிப்பதாக குரல் எழுப்பி உள்ளனர்.

இது குறித்து பீஜிங் கில் உள்ள மின்சூ பல்கலைக் கழக பேராசிரியர் ஜியாங் குன்க்சின், “இது போல தடை என்பது எழுத்துரிமையை முடக்கும் செயல் அல்ல. மாறாக சீனாவின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் என்பதே ஆகும்.  சீனா கடவுள் நம்பிக்கை அற்ற நாடாக தன்னை சொல்லிக் கொண்டாலும், மக்களின் மத நம்பிக்கையை எதிர்க்கவில்லை.  இந்த வருடம் மெக்கா செல்ல 12800 இஸ்லாமியர்களுக்கு அரசு உதவி செய்துள்ளது” என கூறினார்.

கார்ட்டூன் கேலரி