பெங்களூரு

த்திய இணை அமைச்சர் அனுராக் தாக்குக்கு ஆதரவாகக் கர்நாடக அமைச்சர் ரவி டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார்.

                                                           அனுராக் தாக்குர் – டி ரவி

நாடெங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை பதிவேட்டுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   இந்த போராட்டத்துக்கு எதிராக பாஜக தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.  பல நேரங்களில் பாஜக தலைவர்களின் விமர்சனங்கள் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

டில்லியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்குர் இரு தினங்களுக்கு முன்பு கலந்துக் கொண்டார்.  அப்போது அவர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் நாட்டுக்குத் துரோகம் செய்பவர்கள் எனக் குறிப்பிட்டார்,   அத்துடன் அந்தக் கூட்டத்தில் அவர் துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என கோஷம் எழுப்பினார்.  இது மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.

அதை மேலும் அதிகரிப்பது போல் கர்நாடக மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் டி ரவி தனது டிவிட்டரில், “மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்குர கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பயங்கரவாதிகளான அஜ்மல் கசாப் மற்றும் யாகுப் மேனனை தூக்கிலிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளவர்கள் ஆவார்கள்.

இவர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராடி நாட்டை துண்டாட நினைப்போருக்கு ஆதரவு அளித்து பொய்களைப் பரப்பி வருகின்றனர்,   இந்த தேச விரோதிகளுக்கு புல்லட் (துப்பாக்கிக் குண்டு) தான் கிடைக்கும். பிரியாணி கிடைக்காது.  நான் அனுராக் தாக்குரை ஆதரிக்கிறேன்” எனப் பதிந்துள்ளார்.