உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட COVID-19 ஐக் கொல்வது கண்டறியப்பட்டுள்ளது, என்றாலும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

ஆஸ்திரெலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆய்வில், ஐவர்மெக்டின் மருந்ததை SARS-CoV-2 வைரஸ் உள்ள செல் கல்ச்சரில் ஒரே முறை கொடுத்தபோது SARS-CoV-2 வைரசின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது என்று காட்டுகிறது.

“ஒரே ஒரு முறை கொடுக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து அனைத்து வைரஸ் ஆர்.என்.ஏவையும் 48 மணிநேரத்திற்குள் நீக்கியது, அதோடு 24 மணி நேரத்தில் SARS-CoV-2 வைரஸ் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி குறைந்ததையும் கண்டறியப்பட்டுள்ளது.” என்று மோனாஷ் பயோமெடிசின் டிஸ்கவரி இன்ஸ்டிடியூட்டின் டாக்டர் கைலி வாக்ஸ்டாஃப் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இதனை தெரிவித்தார்

வைரஸில் ஐவர்மெக்டின் எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவில்லை என்றாலும், மருந்து வைரஸ் செல்களின் திறனைக் குறைக்கும் என்றும்,

அடுத்த கட்டமாக விஞ்ஞானிகள் மனிதர்களுக்கு தேவைப்படும் அளவை தீர்மானிக்க வேண்டும், அதோடு மனிதர்களுக்கு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட ஐவர்மெக்ட்டின் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, அதை முன் கட்டமருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் உட்படுத்த நிதி தேவைப்படுகிறது. ஐவர்மெக்டின் என்பது FDAவால் அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து ஆகும், இது எச்.ஐ.வி, டெங்கு மற்றும் இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்ட வைரஸ்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது, என்றும் அவர் தெரிவித்தார்

ஐவர்மெக்டின் எனும் இந்த மருந்து எவ்வாறு வேலை செய்கிறது , அது ஏற்கனவே எங்கே பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து மருத்துவர் பாலாஜி கனகசபை , MBBS, அவர்களிடம் கேட்டபோது
ஐவர்மெக்டின் என்பது பல வகையான ஒட்டுண்ணி நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து. இதில் தலை பேன், சிரங்கு,river blindness (onchocerciasis), strongyloidiasis, trichuriasis, ascariasis, and lymphatic filariasis ஆகியவை அடங்கும். இதை வாயால் எடுத்துக்கொள்ளலாம் அல்லது வெளிப்புற தொற்றுநோய்களுக்கு தோலில் மருந்தாக தடவி பயன்படுத்தலாம். ஒருவேளை இந்த ஐவர்மெக்டின், கொரோனா வைரசுக்கு மருந்தாக பயன்படுத்தினால் உலகெங்கும் எளிமையான தீர்வாக இது கிடைக்கும் என்று தெரிவித்தார்

செல்வமுரளி