நீட் எதிர்ப்பு: பாராளுமன்ற வளாகத்தில் கனிமொழி தலைமையில் மனித சங்கிலி!

--

டில்லி,

மிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் திமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் கூட்டண கட்சியினர் இந்த மனித சங்கிலியில் பங்கேற்றனர்.

தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில,  மருத்துவ நுழைவு எழுத வேண்டும் என்று மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக தமிழக மாணவர்கள் மருத்துவ கல்வி படிப்பது எட்டாக்கனியாகி விடும்.

இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசும் அவசர சட்டம் இயற்றியது. ஆனால், தமிழக அரசின் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தராமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

இதற்கிடையில்,  மத்திய அரசின் நீட் தேர்வை ரத்து செய்யகோரி திமுக எம்பி கனிமொழி தலைமையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற வாகத்தில் பதாதைகளை கையில் ஏந்தி  ஆர்ப்பாட்டம் செய்தனர்.