பாதுகாப்பற்ற சிஆர்பிஎஃப் பயிற்சியகம் : தலைமைக்கு கடிதங்கள் எழுதிய அதிகாரி சஸ்பெண்ட்

டில்லி

டந்த 2018 ஆம் வருடம் ஜனவரி முதல் நவம்பர் வரை சிஆர்பிஎஃப் தலைமையகத்துக்கு பயிற்சியகம் குறித்து கடிதங்கள் அனுப்பிய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிஆர்பிஎஃப் படையின் ஐஜி பொறுப்பு வகித்தவர் ரஜனிஷ் ராய். இவர் ஆந்திரப் பிரதேசம் சித்தூரில் 175 ஏக்கர் பரப்பில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியகத்தில் பணி புரிந்து வந்தார். இவர் குஜராத் மாநில ஐபிஎஸ் அதிகாரிஆக 1992 ஆம் வருடம்தேர்வு பெற்றார். வடகிழக்குப் பகுடி சிஆர்பிஎஃப் ஐஜியாக ஜூன் 2017 வரை பணி புரிந்தார். அதன் பிறகு சித்தூர் பயிற்சியகத்துக்கு மாற்றப்பட்டார்.

நாட்டில் திவிரவாத பயிற்சி முகாம்கள் 21 உள்ளன. இதில் சித்தூர் பகுதியில் மூன்று பயிற்சியகங்கள் உள்ளன. இந்த பயிற்சியகங்கள் ஒரு சுற்றுச் சுவர் கூட இல்லாமல் பாதுகப்பற்ற நிலையில் இயங்கி வந்தன. அது மட்டுமின்றி இந்த பயிற்சியகத்துக்கு ஒரு நிரந்தரமான கட்டிடம் கிடையாது. துப்பாக்கி சுடும் பயிற்சி திடல் கிசையாது. எனவே இந்த பயிற்சியகத்தில் எவ்வித தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியும் அளிக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இது குறித்து ராய் கடந்த 2018 ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சிஆர்பிஎஃப் தலைமையகத்துக்கு தொடர்ந்து கடிதம் எழுதி உள்ளார்.    ஆனால் இந்த கடிதங்களுக்கு எவ்வித பதிலும் வரவில்லை. கடந்த டிசம்பர் மாதம் ராய் தனக்கு அளிக்கப்பட்ட பதவியின் எல்லை மீறி செயல்பட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அவர் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் பணியில் இருந்து கட்டாய ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது. அவர் அதை ஒட்டி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து ராவ் கருத்து கூற மறுத்துள்ளார். ஆனால் ஒரு மூத்த அதிகாரி ராய் அங்குள்ள வீரர்களுக்கு இருக்கும் வசதிகளைக் கொண்டு பயிற்சி அளித்தது தலைமைக்கு பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.