அமெரிக்காவை சேர்ந்த Major Gileed Science என்ற நிறுவனம் உருவாக்கி வெளியிட்டுள்ள “Remdesivir” என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை பெறும் வழிகளை இந்திய அரசு கண்டறிய வேண்டும் என்று நிர்மல் கே கங்குலி கூறியுள்ளார்.  “Remdesivir” என்பது தற்போது சோதனையில் உள்ள வைரஸ் எதிர்ப்பு மருந்து ஆகும். இது அமெரிக்காவை சேர்ந்த Major Gilead Sciences என்ற மருந்து நிறுவனத்தினால் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருந்து ஏற்கனவே எபோலா வைரஸ் பரவலின் போது கண்டறியப்பட்டு, பலனளிக்காமல் தோல்வி அடைந்து விட்டது. ஆனால், கொரோனா பரவலின் மையமான வூஹானில் கொரோனா நோயாளிகளுக்கு சற்றே பலனளித்ததால், இது மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த “Remdesivir” என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து உலகிலேயே கண்டறியப்பட்டுள்ள முதல் கொரோனா சிகிச்சை மருந்து என்ற பெருமையுடன் வெளிவந்துள்ளது. அமெரிக்க அரசின் நிதி உதவியுடன், 1,063 கொரோனா நோயாளிகளில் பரிசோதிக்கப்பட்டு, வைரஸ் தடுப்பு மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதாகக் கண்டறிந்துள்ளனர். “நேர்மறையான விளைவை உருவாக்கி, குணமடைவதற்கான நேரத்தைக் குறைப்பதில் ரெமெடிசிவிர் ஒரு குறிப்பிடத்தக்க பண்பைக் கொண்டிருப்பதாக கணக்கீடுகள் காட்டுகிறது” என்று அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் (என்ஐஏஐடி) மையத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி  ஃபாஸி கூறினார். இவர் 1980 ஆம் ஆண்டு வாக்கில், ரெட்டிரோவைரஸ் எனப்படும் RNA வை மரபணுவாகக் கொண்ட வைரஸ்களை கட்டுப்படுத்தும் முறையைக் கண்டறிந்தவர். இவரது கண்டுபிடிப்பு HIV வைரஸுக்கு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவின், உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத் (யு.எஸ்.எஃப்.டி.ஏ) துறை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க Remdesivir மருந்தை பயன்படுத்தும் வகையில் அவசரக்கால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. Remdesivir” என்பது தற்போது சோதனையில் உள்ள வைரஸ் எதிர்ப்பு மருந்து ஆகும். இது அமெரிக்காவை சேர்ந்த Major Gilead Sciences என்ற மருந்து நிறுவனத்தினால் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருந்து ஏற்கனவே எபோலா வைரஸ் பரவலின் போது கண்டறியப்பட்டு, பலனளிக்காமல் தோல்வி அடைந்து விட்டது. ஆனால், கொரோனா பரவலின் மையமான வூஹானில் கொரோனா நோயாளிகளுக்கு சற்றே பலனளித்ததால், இது மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. எமரிட்டஸ் விஞ்ஞானியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநருமான டாக்டர் நிர்மல் கே கங்குலி, விரைவில் வெளியிடப்படவுள்ள இந்த என்ஐஏஐடி- யின் கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்த பின் இந்தியாவிற்கு அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிருபர் சஞ்சிதா ஷர்மா அவர்களுடன் தொலைபேசியில் விவாதித்துள்ளார்.

கடந்தக் காலத்தில் தோல்வியடைந்த மருந்து கோவிட்-19-க்கு பலனளிக்குமா?
Remdesivir தற்போது நமக்கு கிடைத்துள்ள வெற்றிக்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. கோவிட்-19 க்கு எதிராக ஒரு மருந்தைக் கண்டறிந்துள்ளோம் என அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால், இது அனைவராலும் பயன்படுத்தக் கூடிய அளவிலான பொதுவான மருந்தாக இருக்காது. ஏனெனில், இது ஊசி மூலம் இரத்தக் குழாய்களில் செலுத்தும் வகையிலான மருந்து ஆகும். எனவே, இது மருத்துவமனைகளில் உள்நோயாளியாக அனுமத்திக்கப்படுபவர்களுக்கு, விரைவான நிவாரணம் வேண்டி கொடுக்கப்படும் மருந்தாக இருக்கும்.  இந்த மருந்து முதலில் RNA – வை மரபணுவாகக் கொண்ட வைரஸ்கள், மார்பர்க் மற்றும் எபோலாவுக்கு சிகிச்சையளிக்க பன்முகத் தன்மைக் கொண்ட வைரஸ் எதிர்ப்பு மருந்தாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அது வெற்றிபெறவில்லை. பிற்கால சோதனைகளில், SARS [கடுமையான கடுமையான சுவாசக் குறைபாடு நோய்], MERS (மத்திய கிழக்கு நாடுகளில் உண்டான கடுமையான சுவாசக் குறைபாடு நோய்), தற்போதைய கோவிட்-19 மற்றும் விலங்கு கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பதை அறிந்து, தற்போது மறுஉருவாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு மருந்தின் வெற்றியின் நிகழ்தகவைக் அறியும் லிப்பின்ஸ்கியின் விதியை பின்பற்றுவதையும் சோதிக்கப்பட்டது. இந்த மருந்தானது ஒரு வைரஸ் மனித செல்களுக்குள் சென்றபின், தனது மரபணுவை நகலெடுத்து புதிய சேய் செல்களை உருவாக்கும் நிகழ்வை குறிவைத்து செயல்படுவதால், மியூட்டேசன் எனப்படும் எதிர்ப்பு மருந்திற்கு எதிராக தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டு,  புதிய பதிப்பு வைரஸாக மாறும் நிகழ்வையும் இந்த மருந்து தடை செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது
என்ஐஏஐடி மேற்கொண்ட ஆய்வுகளின்படி, கொரோனா நோயாளிகளுக்கு விரைவான நிவாரணமளிக்கும் இந்த மருந்தின் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மருந்து நிறுவனம், உலகம் முழுவதும் ஏழு நாடுகளில் இருந்து 5,600 நோயாளிகளைக் கொண்ட விரிவான சோதனைத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தியா அந்த பட்டியலில் இல்லை. இந்த மருந்தும் இன்னும் வேறு எந்த நாட்டிலிருந்தும் முறையான அனுமதியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவும் தற்போதைக்கு ஒரு அவசரக் கால மருந்தாகவே அங்கீகரித்துள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினில் பணிபுரியும்  மருத்துவம் மற்றும் தொற்று நோய்களின் மருத்துவ பேராசிரியர் டாக்டர் அருணா சுப்பிரமணியன் மேற்கொண்ட ஒரு சிறிய ஆய்வில், 5 மில்லிகிராம் மருந்து வழங்கப்பட்ட 50% நோயாளிகள் 10 நாட்களில் குணமடைந்தனர் என்றும், 60.6% பேர் 14 நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர் என்றும் கண்டறியப்பட்டது.
அமெரிக்காவின் அவசரகால அனுமதி
கோவிட் -19 நோயாளிகளுக்கான குணமடையும் காலம் 15 முதல் 11 நாட்கள் வரையில் குறைக்கிறது என்பததை அமெரிக்காவின் என்ஐஏஐடி-யின் ஆரம்பக்கட்ட சோதனைகள் காண்பித்துள்ளன. ஆனால் இது இந்தியாவில் பயன்படுத்தப்படும் Tamiflu போன்ற இன்ஃப்ளூயன்ஸா மருந்துகளின் நன்மைகளை ஒத்துள்ளது. இந்த மருந்தும் முழுமையான குணமடைதலை வழங்காவிட்டாலும், விரைவான குணமடைதலை ஊக்குவிக்கிறது.  எனவே, வென்டிலேட்டர் எனப்படும் சுவாசிக்கும் கருவியின் உதவே தேவைப்படாத, ஆனால் ஆக்சிஜன் கொடுக்கப்பட வேண்டிய நிலையில் இருந்த நிமோனியா நோயாளிகளுக்கு என்ஐஏஐடி இந்த மருந்தை சோதனை முயற்சியாக 5  நாட்கள் மற்றும் 10 நாட்களுக்கு கொடுத்து சோதித்தனர். இந்த சோதனையில்  மரணத்தின் தாக்கம் 4% சதவித அளவுக்கு குறைந்தாலும், புள்ளிவிவரக் கணக்கீடுகள் ரீதியாக போதுமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதால் கைவிடப்பட்டது.
Remdesivir சோதனையில், முதல் டோஸாக, 200 மில்லி கிராம் அளவுக்கும், பின்னர் தினமும் 100 மில்லி கிராம் என்ற அளவுக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஊசி மூலம் நேரடியாக இரத்தக் குழாய்களில் செலுத்தப்பட்டது. ஒரு குழுவினருக்கு 5 நாட்களும், மற்றொரு குழுவினருக்கு 10 நாட்களுக்கும் வழங்கப்பட்டது. விளைவாக,  Remdesivir கொடுக்கப்பட்ட நோயாளிகளில் கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் கருவியை பயன்படுத்த வேண்டிய அவசியம் உருவாகவில்லை. முன் எப்போதும் இல்லாத வகையும் வெறும் 30%-க்கும் குறைவான நோயாளிகளுக்கு மட்டுமே வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 10-14 நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவதை இந்த மருந்து வெகுவாக ஊக்குவித்தது. ஐந்து நாட்களில் வழங்கப்படும் சிகிச்சைகள் 10 நாட்காளுக்கான சிகிச்சைகள் வழங்கக் கூடிய பயனை அளித்ததால், இதன் பயன்பாடு மருத்துவமனையில் தங்குதல் நாட்கள், மருந்துகளின் செலவீனம் மற்றும் பக்க விளைவுகள் ஆகியவற்றில் நன்மையான தாக்கத்தை கொடுக்கிறது.
நாம் Remdesivir மருந்தை பயன்படுத்துவதை அங்கீகரிக்க வேண்டுமா?
கிலியட் சயின்சஸ் நிறுவனத்திடம், 1.2 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான அளவில் இந்த மருந்தின் இருப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தியாவைத் தவிர பல நாடுகளுக்கு தனது சோதனையின் வட்டத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் மற்றும் கணக்கீடுகளின் அடிப்படையில் பார்த்தால்,  Remdesivir மட்டுமே COVID-19 – க்கு எதிரான மருந்துகளில் முதன்மையாக உள்ளது. ஆனால், மருந்தின் இருப்பு மற்றும் விநியோகம் மிகக் குறைவாக இருக்கும் என்பதால், இந்த மருந்தை பெறுவதற்கு இந்தியா உரிய திட்டமிட வேண்டும். அமெரிக்கா இந்த நெருக்கடியை சமாளிக்கும் விதமாக, இந்த மருந்தை அவசரகால பயன்பாடாக அங்கீகரித்து அனுமதியை அவன்கியுள்ளது. அதைப்போலவே இந்தியாவும், தன மக்களுக்கு இந்த மருந்து கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏனெனில், இந்தியாவும் கடந்த காலத்தில், எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சையளிக்க, பயனுள்ள ரெட்ரோவைரஸ் எதிர்ப்பு மருந்துகளை மலிவு விலையில் வழங்கி தனது சொந்த மக்கள் மட்டுமின்றி, ஆப்பிரிக்காவின் பல நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் மக்களின் உயிரைக் காத்துள்ளது.
English: Sanchita Sharma
தமிழில்: லயா