பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தில், அனு இம்மானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் படப்பிடிப்பு மே 8-ம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக அனு இம்மானுவேலை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷாலுடன் நடித்தவர் அனு இம்மானுவேல் என்பது குறிப்பிடத்தக்கது.