பாலிவுட் நடிகரான அனுபம் கெர் (Anupam Kher) தனது தனிப்பட்ட மற்றும் திரையுலக வாழ்க்கை தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் சில த்ரோபேக் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த புகைப்படங்கள் “ஹம்” திரைப்படத்தில் வரும் ஜும்மா சும்மா (Jumma Chumma) என்ற பாடலின் படப்பிடிப்பு ஒத்திகையின் போது எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இந்த பாடல் நியூயார்க்கில் எடுக்கப்பட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோர் உள்ளனர். அந்த படங்களை அவரது நண்பர் மினல் திரிவேதி தனக்கு அனுப்பியதாகவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.