பும்ராவுடன் அனுபமாவுக்கு திருமணமா…..?

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவை அனுபமா பரமேஸ்வரன் மணந்துக் கொள்வதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர் அனுபமாவை திருமணம் செய்து கொள்வதற்காக ஓய்வு எடுத்திருப்பதாக வதந்திகள் வலம் வருகின்றன. அதே நேரத்தில் த்வாரகாவுக்குப் பயணம் செய்யும் செய்தியை பகிர்ந்து கொண்டார் அனுபமா. இது அவர்களின் திருமணம் குறித்த வதந்தியை இன்னும் தீவிரமாக்கியது.

இதற்கு மறுப்பு தெரிவித்து பேட்டியளித்திருக்கும் அனுபமாவின் தாயார், “இன்ஸ்டாகிராமில் அனுபமா -பும்ரா இருவரும் ஒருவரையொருவர் ஃபாலோ செய்வதை பிடிக்காதவர்கள் தான் இருவரையும் சேர்த்து தவறான தகவலை வெளியிடுகிறார்கள். எல்லோரும் மறந்திருக்கும் போது புதிய கதை ஒன்று வெளியாகும். இதை நாங்கள் பாசிட்டிவ்வாகவே பார்க்கிறோம். இதற்கு முன்னர் கூட அனுபமாவை பும்ராவுடன் இணைத்து பேசினார்கள். பின்னர் ஒருவரையொருவர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்திவிட்டார்கள் என எண்ணுகிறேன்.

ஒருமுறை விடுதி ஒன்றில் அனுபமா ஷூட்டிங்கில் இருந்தார். அப்போது அதே விடுதியில் பும்ராவும் தங்கினார். அப்போது தான் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்தார்கள். இப்போது இருவரைப்பற்றியும் ஏன் செய்திகள் வெளிவருகின்றன என்பது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்காகவே அனுபமா ராஜ்கோட்டுக்கு அனுபமா சென்றிருக்கிறார். எந்த விதமான வதந்தி பரப்பினாலும் அதை நாங்கள் வேடிக்கையாகவே பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.