பிரபல பாடகி அனுராதா பட்வால் தன் தாயென கூறி ரூ. 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு கேரள பெண் வழக்கு பதிவு…!

பிரபல பாடகி அனுராதா பட்வால், அருண் பட்வாலின் மகள் நான். நான் பிறந்து நான்கு நாட்களில் அவர்கள் என்னை பொன்னச்சன் மற்றும் ஆக்னஸிடம் கொடுத்துவிட்டார்கள்.

பொன்னச்சன் தான் இறக்கும்போது நான் அனுராதா பட்வாலின் மகள் என்பதை கூறினார். ஆக்னஸுக்கு அல்ஸீமர் நோய் .

இதுகுறித்து அனுராதாவை தொடர்பு கொள்ள தான் முயன்றதாகவும், அவர் கர்மலாவின் செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டதாகவும் கூறி தனக்கு பாடகி அனுராதா ரூ. 50 கோடி நஷ்டஈடு அளிக்க வேண்டும் என கோரி கேரளாவை சேர்ந்தவர் கர்மலா மாடெக்ஸ்(45).திருவனந்தபுரத்தில் உள்ள மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து அனுராதா முட்டாள்த்தனமான விஷயங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்பில்லை என்று கூறியுள்ளார் .

அனுராதா, அருண் தம்பதிக்கு ஆதித்யா என்கிற மகனும், கவிதா என்கிற மகளும் உள்ளனர். அருண் தற்போது உயிருடன் இல்லை.