நடிகை அளித்த பாலியல் புகார் : இயக்குநர் அனுராக்கிடம்  8 மணி நேரம் விசாரணை..

நடிகை அளித்த பாலியல் புகார் : இயக்குநர் அனுராக்கிடம்  8 மணி நேரம் விசாரணை..

இந்தி நடிகை பாயல்கோஷ் கடந்த 23 ஆம் தேதி மும்பையில் உள்ள  வெர்சோவா காவல் நிலையத்தில் பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பரபரப்பு புகார் அளித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு சினிமா வாய்ப்பு கேட்டு அனுராக் வீட்டுக்குச் சென்ற போது அவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த புகாரில் கூறி இருந்தார்.

இதையடுத்து அனுராக் காஷ்யப், வெர்சோவா காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று போலீசார்  சம்மன் அனுப்பினர்.

அதனை ஏற்று நேற்று காலை 10 மணிக்கு அனுராக் அந்த காவல்நிலையத்தில் ஆஜர் ஆனார்.

அவரிடம் 8 மணி நேரம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

’’மீண்டும் இயக்குநர் அனுராக்கிடம் விசாரணை நடத்தப்படும்’ என போலீசார் தெரிவித்தனர்.

-பா.பாரதி.

You may have missed