வீடியோவில் கஞ்சா பயன்படுத்தினாராஅனுராக் காஷ்யப்…..!

வீடியோ அழைப்பின்போது பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கஞ்சா பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒரு பயனாளர் அனுராக் ‘கஞ்சா சுருட்டுவது போல்’ உள்ளது வீடியோவில் , மும்பை காவல்துறை இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அனுராக் காஷ்யப், அந்த வீடியோவை மும்பை போலீசார் பார்க்கவேண்டும் என்றும் அது வெறும் புகையிலை தான் கஞ்சா அல்ல என்றும் கூறியுள்ளார். இது குறித்து விரிவான விசாரணை நடத்தினால் “பக்தர்கள்” சிலருக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும் என்றும் அனுராக் காஷ்யப் பதிவிட்டுள்ளார்.

You may have missed