நடிகர் நட்டி விளாசல்.. மன்னிப்பு கேட்ட இயக்குனர்..

டிகர் நட்டி என்கிற நட்ராஜ். மிளகாய், நம்ம வீட்டுபிள்ளை. சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்ப துடன் தமிழ், இந்தி படங்களில் பிரபல கேமராமேனாகவும் உள்ளார்.
இவர் இந்தி பட இயக்குனரும் தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகளில் நடித்தவருமான அனுராக் கஷ்யாப்பை விளாசித் தள்ளி இருக்கிறார். அவர் கூறும்போது,’அனுராக் கஷ்யாப் பகுதி நேர எழுத்தாளராக வந்ததிலிருந்து எனக்கு தெரியும். பணம் கூட வாங்காமல் நான் அவருக்கு ஆதராவாக பணியாற்றி இருக்கி றேன். அவரிடமிருந்து நான் எதுவும் பெற்றதில்லை ஆனால் அவருக்காக நான் நிறையவே செய்திருக்கிறேன். நண்பர்கள் வட்டம் அவரை சுற்றி எப்போதோ விலகி விட்டது. அவருடைய குணத்தை பார்த்தும் செயலை பார்த்தும் அவர்கள் விலகி விட்டனர். நான் அவரை பணி நிமித்தமாக எதிர்பார்த்தபோது எனக்கு தொடர்பில் வரவில்லை. முட்டாள் என்றைக்கும் முட்டாள்தான். சுயநலமே அவரது குணம். யாரும் அவர் பேசுவதை காது கொடுத்து கேட்க மாட்டார்கள். அனுராக் பற்றி நான் சொல்வதெல்லாம் உண்மை . என் இதயத் திலிருந்து இதனை தெரிவிக்கிறேன்.


இவ்வாறு நட்டி தெரிவித்திருக்கிறார்.

நட்டிக்கு பதில் அளித்திருக்கும் அனுராக் முதலில் அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக கூறியிருக்கிறார். ‘தமிழ் சினிமாவை எனக்கு அறிமுகப்படுத் தியவர் நட்டிதான். ரஜினி, பாலா ஆகியோ ரையும் அவர்தான் சந்திக்க வைத்தார். அவர் எனது நண்பர் மட்டுமல்ல நாங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்தோம். என்னை திட்டுவதற்கு சகல உரிமையும் அவருக்கு இருக்கிறது. அவர் தொடர்பு கொண்ட போது என்னால் அவரது அழைப்பை ஏற்க முடியவில்லை. அவரது வலி நிஜமானது. அவருக்கு தேவை பட்டபோது நான் அந்த இடத்தில் இல்லாமல்போய்விட்டேன் அதுபற்றி எனக்கு தெரியாது. ஐ ஆம் சாரி நட்டி’என அனுராக் கஷ்யாப் கூறி உள்ளார்.