இயக்குநர் பிரகாஷ் கோவேலமுடி- யை திருமணம் செய்கிறாரா அனுஷ்கா…..?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா. 38 வயதாகும் அனுஸ்காவிற்கு பலமுறை திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வந்தது . ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.

தற்போது மனைவியை பிரிந்த இயக்குநர் பிரகாஷ் கோவிலமுடியை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

2015-ம் ஆண்டு ஆர்யா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்கு படம் ‘சைஸ் ஜீரோ’. தமிழில் ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற பெயரில் வெளியானது. இந்தப் படத்தை இயக்கியவர் பிரகாஷ் கோவேலமுடி.

என் தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிடுவது எனக்கு பிடிக்காது. திருமணம் என் தனிப்பட்ட விஷயம். மற்றவர்களை போன்று எனக்கும் திருமணம் முக்கியமானது. எனக்கு என்று திருமணம் நடக்கிறதோ அன்று அனைவருக்கும் தெரிய வரும். எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் எதையும் மறைக்க விரும்பாத ஆள் நான். நான் யாரை திருமணம் செய்கிறேன் என்பதை நானே அறிவிப்பேன் என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.