இஞ்சி இடுப்பழகி அனுஷ்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!

தமிழில் 2007ஆம் ஆண்டு வெளியான ரெண்டு என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமானவர் அனுஷ்கா.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு சினி மார்க்கெட்டிலும் நீங்காத இடம் பிடித்து இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார் .

ரஜினி , விஜய் , அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு போன்ற பெரிய நடிகர்களோடு இணைந்து நடித்த அனுஷகாவுக்கு கோலிவுட்டில் இன்று வரை தனி மார்க்கெட் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

1981 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதியில் பிறந்த நடிகை அனுஷ்கா தற்போது 39 வயதை எட்டியுள்ளார் .