கிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா….!

கொரோனா வைரஸுக்கு இதுவரை 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலக பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பிரபலங்கள் வீட்டில் என்னென்ன செய்கிறார்கள் என்பதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கு அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா முடி வெட்டி விடும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “ கிச்சன் கத்தரியால் எனக்கு முடி வெட்டுகிறார். அற்புதமான ஹேர் கட் செய்துள்ளார் என் மனைவி,” என்று தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி