அனுஷ்கா தற்போது ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் சைலன்ஸ் என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் அனுஷ்காவின் அடுத்த படம் பற்றி ஒரு புதிய தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜோடியாக முதல் முறையாக அனுஷ்கா நடிக்க உள்ளார் என கூறப்பட்டிருந்தது.
இந்த படத்தை AL விஜய் இயக்கவுள்ளார் என்றும், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்றும் செய்திகள் பரவியது.
ஆனால் இதை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்மறுத்துள்ளார் .