பாகுபலியுடன் காதலா?  சீறும் தேவசேனா

சென்னை

ன்னையும் பிரபாசையும் இணைத்து கிசுகிசுத்தால் சட்டப்படி வழக்கு தொடுப்பேன் என அனுஷ்கா கூறியுள்ளார்

பாகுபலி திரைப்படத்தில் பாகுபலியாக நடித்த பிரபாஸும், தேவசேனாவாக நடித்த அனுஷ்காவும் நிஜ வாழ்விலும் இணையப் போவதாக கிசுகிசுக்கள் பரவ ஆரம்பித்தன.

அது மட்டும் அல்ல, பிரபாஸ் வீட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு என உபகதைகளும் பரவி வந்தன.

இருவருமே இதைப் பற்றி எதுவும் கருத்து சொல்லவில்லை.

ஆனால் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அனுஷ்கா,  இந்த கிசுகிசு உண்மையில்லை எனவும், இனி யாரும் இது போல வதந்திகளைப் பரப்பினால் வழக்கு அவர்கள் மேல் பாயும் என கூறினார்.

மேலும், வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தாம் தயாராக இருப்பதாக சீற்றத்துடன் கூறினார்