அனுஷ்கா சர்மா, அமேசான் ப்ரைமுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்….!

பாதாள் லோக்’ என்ற வெப் சீரிஸ், அனுஷ்கா சர்மா தயாரிப்பில், அமேசான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியானது.

இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள அரசியல் ரீதியான சில விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

சீக்கிய சமூகத்தைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளதாக குர்தீபிந்தர் சிங் தில்லான் என்கிற வழக்கறிஞர் தயாரிப்பாளர் அனுஷ்கா சர்மா மீதும், அதை வெளியிட்ட அமேசான் ப்ரைம் தளம் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதிபதி அருண் குமார் தியாகி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.