பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு மெழுகு சிலை!

சிங்கப்பூரில் உள்ள மேடம் டூசாட்ஸ்ட் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு மெழுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. தனது சிலையை அனுஷ்கா ஷர்மாவே திறந்து வைத்தார்.

anushka

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட மேடம் டூசாட்ஸ்ட் அருங்காட்சியகள் சிங்கப்பூரில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் விளையாட்டு, திரைத்துறை, கலைத்துறை, அரசியல், பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்திய பிரபலங்களின் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், கரீனா கபூர், மாதுரி திக்‌ஷித் உள்ளிட்ட பிரபலங்களின் சிலைகள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் சிலையும் இணைந்துள்ளது. கலைத்துறையில் அனுஷ்கா சர்மா ஈடுபட்டு வருவதை பாராட்டி இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. விலை உயர்ந்த கைப்பேசியை பிடித்துக் கொண்டு செல்பி எடுத்து கொள்வது போன்று அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிலையை பார்க்க வருவோர் தங்களது செல்பி புகைப்படங்களை அனுஷ்காவுடன் இணைந்து எடுத்துக் கொள்ளும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என மேடம் டூசாட்ஸ்ட் அருஞ்காட்சியகள் கூறியுள்ளது.