பிலௌரி ட்ரெய்லர்: பத்து மணிநேரத்தில் 25 லட்சம் பேர் பார்த்தனர்


னுஷ்கா ஷர்மா பேயாக நடித்துள்ள “பிலௌரி” இந்திப் படத்தின் ட்ரெய்லர் வெளியான முதல் பத்து மணி நேரத்தில் 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

பாலிவுட்டில் தயாரிப்பாளர் அவதாரம் தயாரிப்பில், அன்சாய் லால் இயக்கியுள்ள படம் பிலௌரி. இதில் அனுஷ்கா ஷர்மா, சுராஜ் ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

திருமணத் தடை நீங்க மரத்தைத் திருமணம் செய்யும் சுராஜ் சர்மாவை, அந்த மரத்தில் வசிக்கும் அனுஷ்கா ஷர்மாவின் ஆவி பின் தொடருவதுதான் கதை.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் யூட்யூபில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

படத்தின் ட்ரெய்லர் வெளியான முதல் பத்து மணி நேரத்தில் 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.. இது ஒரு சாதனையாகும்.

கார்ட்டூன் கேலரி