12 வருடங்களுக்கு பிறகு மாதவனுடன் இணையும் அனுஷ்கா ஷெட்டி…!

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் சைலண்ட் த்ரில்லராக உருவாகும் புதிய படத்தில் மாதவனுடன் அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு கோபி மோகன், கோனா வெங்கட் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.

ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பணியாற்றவிருக்கும் இந்த படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைக்க ஷானியேல் டியோ ஒளிப்பதிவு செய்ய, யனா ருசனோவா கலை பணிகளை கவனிக்கிறார்.

அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் சுப்பாராஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், கிரண் ஸ்டுடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.