கௌதம் மேனன் படத்தில் கமலுக்கு ஜோடியாகிறாரா அனுஷ்கா…?

கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 2006ம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு.

வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், விமர்சன ரீதியில் பலரிடம் பாராட்டைப் பெற்ற படம் இதுவாகும்.

சமீபத்தில் கௌதம் மேனன் தனது திரைப்படங்களை ரிலீஸ் செய்யமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது, ஐசரி கணேசன் இவருக்கு உதவி புரிந்துள்ளார் . என்னை நோக்கி பாயும் தோட்டா , துருவ நட்சத்திரம் இவரின் உதவியால் தான் வெளிவந்தது.

இதனால் வேல்ஸ் ஃப்லிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு இரண்டு படங்கள் இயக்கித் தருவதாக கௌதம் மேனன் ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம். அதில் ஒன்று சூர்யாவுடனும், மற்றொன்று கமலுடனும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.