தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உண்டு : அனுஷ்கா

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட்டில் இருப்பதாக பல நடிகைகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நிசப்தம் பட விளம்பர நிகழ்ச்சியில் அனுஷ்கா ‘தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு அந்த பிரச்சனை ஏற்பட்டது இல்லை’ என பேசியுள்ளார் .

எளிய வழியில் சென்று குறைந்த நாட்கள் சினிமாவில் இருப்பதும், கடின வழியை தேர்வு செய்து பல காலம் தாக்குப்பிடிப்பதும் நம் கையில் தான் இருக்கிறது என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.