ஒரு வழியாக அனுஷ்காவின் ‘சைலென்ஸ்’ படம் ஒடிடிக்கு வந்தது..

சினிமா தியேட்டர்கள் கொரோனா பீதியால் இன்னமும் திறக்கப்படாமலி ருக்கிறது. இதனால் முடிவடைந்த படங் கள் ஒடிடி தலத்தில் வெளியாகிறது. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் போன்ற பல படங்கள் ஒடிடியில் ரிலீஸ் ஆனது. அதுபோல் அனுஷ்கா நடித்துள்ள ’சைலென்ஸ்’ ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டதை பட நிறுவனம் மறுத்து வந்தது. அனுஷ்காவும் படத்தை தியேட்டரில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.


தியேட்டர் திறப்புக்காக காத்திருந்து கண்கள் பூத்துப்போன நிலையில் அனுஷ்கா நடித்திருக்கும் சைலென்ஸ் படத்தை ஒடிடியில் வெளியிட சைலன்ட்டாக பேச்சுவார்தை நடித்தி வந்தது படக் குழு. அது ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியரை அமேசான் ப்ரைம் வீடியோ அறிவித்திருக்கிறது இப்படத்தில் ஆர்.மாதவன் ஹீரோவாக நடித்திருக் கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலென்ஸ் என்ற பெயரில் இப்படம் 2020, அக்டோபர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் 3 மொழிகளில் உலகளவில் வெளியாகவுள்ளது.
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில்,  டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார்.

You may have missed