”பேசாதீங்க ஆரி..” ஆரியை எச்சரிக்கும் அனிதா….!

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அடுத்து யாராக இருக்கக்கூடும் என்ற நிலையில் இன்று போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை நாமினேட் செய்தனர்.

மேலும் இந்த வாரம் ‘மாட்டினியா’ என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. போட்டியாளர்கள் யாரை வேண்டுமானாலும், என்ன கேள்வி வேணாலும் கேட்கலாம் என்று பிக்பாஸ் கூற பாலா ஆரியை பார்த்து கேட்கும் கேள்விக்கு சபை ரணகளமாகிறது.

தற்போது பிக்பாஸ்-ன் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் அனிதாவின் செயல்பாடுகள் குறித்து ஆரி அவரின் குடும்ப உறுப்பினர்களை குறிப்பிட்டு பேச, தனது கணவர், அப்பா, அம்மாவை குறிப்பிட்டு ஸ்டேஜில் பேச வேண்டாம் என அனிதா தெரிவிக்கிறார். ”பேசாதீங்க ஆரி..” கத்துவது போலவும் இந்த புரொமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.