சென்னை:

10ம் வகுப்பு மதிப்பெண்களில் குளறுபடி செய்தால் நடவடிக்கை பாயும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளைக்கொண்டு, மாணவர்களின் தேர்ச்சி குறித்து அறிவிக்க தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் உத்தரவிட்டது. மேலும், மாணவர்களின் மதிப்பெண்கள் பட்டியலையும் அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்து.

இந்த நிலையில், சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண்களில் குளறுபடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அதிக மதிப்பெண்கள் வழங்க சில மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில்,  மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.