தமிழ்நாட்டில் எவனுக்காவது எந்த பிரச்சனைனாலும் என்னைத்தான் தேடுவானுங்க! நித்யானந்தா நக்கல் வீடியோ….

சென்னை:

குழந்தைகள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள நித்தியானந்தா, நக்கல் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  தமிழ்நாட்டில் எவனுக்காவது எந்த பிரச்சனைனாலும் என்னைத்தான் தேடுவானுங்க! என்று காவல்துறையையும் நக்கல் செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சைக்கு பேர் போனவர் சுவாமி நித்தியானந்தா. இவர்மீது பாலியல் புகார் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு உள்ளது. பல வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து இரண்டு குழந்தைகளை அழைத்து வந்து, அகமதாபாத் பீடத்தில் வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய காவல்துறையினர், அந்த குழந்தைகளை மீட்ட நிலையில், ஆசிரமத்தை நடத்தி வந்த இரண்டு நித்தியானந்தா சீடர்களையும் கைது செய்தனர்.

இந்த குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக நித்தியானந்தாவை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், அவர் தலைமறைவாகி விட்டார். அவர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், நித்தியானந்த தரப்பில் இருந்து ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.

அதில், தொடக்கத்தில், ஆங்கிலத்தில் பேசும் நித்தியானந்தா, பின்னர் தமிழிலேயே பேசுகிறார். தனது சத்சங்கம் காலையில் தொடரும் என்றும்,  தனது ஆன்மிக பயணம் நடைபெறும் என்று ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளவர், தமிழ்ல பேச மாட்டேன் என்று கூறிவிட்டு, பின்னர் தமிழில் பேசும்போது, தமிழ் மக்களையும், தமிழக காவல்துறையையும் நக்கலடித்துள்ளார்… 

தமிழ்ல வாயைத் தொறந்தாலே எதாவது தகராறு பண்றானுங்க…. எதையாவது நான் சொல்லி வைச்சுடுறேன்… இவனுகளுக்கு தமிழும் புரிய மாட்டேங்குது… புரியலைன்னா சும்மாவும் இருக்க மாட்டேங்குறாங்க… மூல லிங்கத்துக்கும், மூலவர் லிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியமாட்டேங்குது…  எதையாவது நான் சொல்ல… எதையாவது கேஸை பைல் பண்ணிக் வைக்கிறானுங்க…  இதுக்கு அண்டிசிபட்ரி பைல் வாங்கி ஓடறதுக்கே  டைம் சரியா இருக்கு , அதனாலதான்யா  தமிழ்சங்கம் பேசாமல் சும்மா இருக்கேன் சீக்கிரம் வந்துடுறேன்….  இன்னும் தமிழ்நாட்டில் எவனுக்காவது எந்த பிராப்ளம்மானும், அன்டென்சனை திருப்பது நித்தியானந்தா வைத்தான்  தேடுவாங்க…

நித்தியானந்தா பேசும் வீடியோவை நீங்களும் கேட்டு ரசியுங்களேன்….

https://youtu.be/NX0ueYfsvj4