சென்னை:

திமுக என்ற குதிரையில் யாரும் சவாரி செய்யலாம் என்று அமைச்சர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதுபோல, அதிமுக தேமுதிக கூட்டணியை எதிர்க்கட்சிகள் உடைக்க முயற்சி செய்வதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.

அதிமுக அணியில், தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டநிலையில்,  அதிக தொகுதிகளை கேட்டு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதன் காரணமாக இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையில் பிரேமலதாவின் பேட்டி அதிமுகவில்  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கருத்துக்களை தெரிவித்துஉள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:

அதிமுக கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக கூறிய முதல்வர், கட்சியினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி:

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார்! அதிமுக என்ற குதிரையில் யாரும் சவாரி செய்யலாம்; அதற்காக குதிரையை தூக்கிச்செல்வேன் என கூறக்கூடாது

அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக எம்பிக்களால் பயனில்லை என்று பிரேமலதா கூறியதை ஏற்க முடியாது என்றவர்,  மேகதாது பிரச்சனையில் அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்கள்தான் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். தே.மு.தி.க. மீது நாங்கள் மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை. யாரையும் கடுமையாக விமர்சித்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்பதுதான் எங்கள் கொள்கை.

அமைச்சர் தங்கமணி:

நாளை மாலைக்குள் அதிமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு முடிவுகள் தெரிந்துவிடும் என அமைச்சர் தங்கமணி நம்பிக்கை தெரிவித்தார்.