அமராவதி:

ந்திர சட்டமன்றத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு  பாஜக எம்எல்ஏவை ஆவேசமாக கடிந்து கொண்டார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலத்துக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க மறுத்த பாஜக அரசுக்கு எதிராக மாநிலத்தில்  இன்று எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று சட்டமன்றத்துக்கு தெலுங்கு தேசதலைவரும், முதல்வருமான சந்திர பாபு நாயுடு உள்பட அனைத்துஉறுப்பினர்களும் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர்.

சட்டமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக சந்திரபாபு நாயுடு பேசுக்கொண்டிருந்த போது, குறுக்கிட பாஜக எம்எல்ஏமீது கடும் ஆவேசத்துடன் கையை நீட்டி பேசினார்.

அப்போது, பாஜக எம்எல்ஏவை பார்த்து,  ‘நீங்கள் எம்.எல்.ஏ.வாக இருப்பதற்கு தகுதியுடையவர் அல்ல, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், என் ரத்தம் கொதித்துக்கொண்டிருக்கிறது, என்ன செய்வது? எங்களை சிறையில் தள்ளலாமா? எனக்கு தாங்க முடியாத மன வேதனை ஏற்பட்டு உள்ளது, மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டதை தயவு செய்து ஒப்பிட்டு பாருங்கள்  என கடுத்து கோபத்தில் பேசினார்.

இதன் காரணமாக சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலத்துக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஏற்கனவே மோடி உறுதி அளித்த நிலையில், பின்னர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்ததஸ்து தர மத்தியஅரசு மறுத்து விட்டது. இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த தெலுங்கு தேசம், மோடி அரசுக்கு எதிராக பாராளு மன்ற வளாகத்திலும் தெலுங்குதேச எம்.பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.