‘புதுமனை புகுவிழா’: ஆந்திராவில் ஒரே நேரத்தில் 3 லட்சம் மக்களுக்கு வீடுகள் வழங்கிய சந்திரபாபு நாயுடு

அமராவதி:

ந்திராவில் ஏழைகளுக்கு அரசு சார்பில் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின்படி  நேற்று ஒரே நாளில் 3 லட்சம் பேரக்கு வீடுகள் வழங்கப்பட்டன.

ஆந்திராவில் வீடில்லாமல் எந்தவொரு ஏழை குடும்பத்தாரும் என்ற முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் லட்சியம். இதற்காக ‘புதுமனை புகுவிழா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின்படி வீடுகள் இல்லாத ஏழை குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. இதன்படி 3 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. காரணமாக, முதல் கட்டமாக புதுமனை புகுவிழா’  திட்டத்தின்படி 3 லட்சம் இலவச வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகளை நேற்று 3 லட்சம் மக்களிடம் வழங்கி  ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி முனிசிபல் அரங்கில் நடைபெற்ற விழாவில் வீட்டு வசதி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

‘புதுமனை புகுவிழா’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்து வீட்டு வசதி திட்ட இயக்குனர்களுடன், ஊரக வீட்டு வசதி, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை மந்திரி கலவ ஸ்ரீநிவாசலு கலந்தாய்வு நடத்தினார்.

புதுமனை புகுவிழா திட்டம் மாநிலத்தின் 174 தொகுதிகளில் உள்ள 12 ஆயிரத்து 767 கிராம பஞ்சாயத்துகள், 664 மண்டலங்கள் மற்றும் 110 நகராட்சிகளை உள்ளடக்கிய 2 ஆயிரத்து 93 நகராட்சி வார்டுகள் ஆகியவற்றில் செயல்படுத்தப்பட உள்ளது.

2019-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு வசதி திட்டங்களில் வெளிப்படையான தன்மையுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில், பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும். வீட்டு வசதி திட்டத்தை மக்களுக்கு எளிதாக வழங்குவதற்கான பல விதிகளை அரசு தளர்த்தியதோடு, கூடுதல் நிதி உதவிகளையும் அளித்திருக்கிறது.