பெங்களூரு:

முன்னாள் பிரதமர் தேவே கவுடாவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.


தேர்தலுக்குப் பிறகு இழுபறி நீடித்தால், பாஜக அல்லாத எதிர்கட்சிகளை திரட்டி ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்து தேர்தல் முடிவுக்குப் பின் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவையும் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.

இதேபோல், தேவே கவுடாவின் மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமியையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.

தேர்தல் முடிவுக்கு பிந்தைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தாக மத சார்பற்ற ஜனதா தளக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.