ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை

ஆந்திரா:
ந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,759- லிருந்து 13,387 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 420- லிருந்து 437 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,515- லிருந்து 1,749 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,205 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் டெல்லியில் 1,640, தமிழகத்தில் 1,267, ராஜஸ்தானில் 1,131, மத்திய பிரதேசத்தில் 1,120, உத்தரப்பிரதேசத்தில் 805, தெலங்கானாவில் 700, கேரளாவில் 395, ஆந்திராவில் 534, குஜராத்தில் 930, கர்நாடகாவில் 315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்கொரியாவில் இருந்து சிறப்பு விமானம் ஒரு லட்சம் ரேபிட் சோதனை கிட்கள் ஆந்திரபிரதேசத்திற்கு வந்தடைந்தது. இந்நிலையில், அமராவதியில் உள்ள கேம்ப் அலுவலகத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்த ரேபிட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 502-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.