ஆந்திர அமைச்சர் நாராயணாவுக்கு ரூ.247 கோடி சொத்து; மனைவிக்கு ரூ. 397 கோடி சொத்து: வேட்புமனு தாக்கலில் சொத்து விவரம்

நெல்லூர்:

ஆந்திர மாநில அமைச்சர் நாராயணா வெளியிட்ட சொத்து விவரத்தில், தனது குடும்பத்துக்கு ரூ.644 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.


ஆந்திர மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் பொங்குரு நாராயணா. இவர் நாராயணா குரூப் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஆவார்.

இவர் நெல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதில், தன் பெயரில் ரூ.247 கோடி சொத்துகளும். தன் மனைவி பொங்குரு ரமாதேவிக்கு ரூ.397 கோடி சொத்து மதிப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் பெயரில் ரூ.143 கோடி அசையும் சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.16 கோடிக்கு தங்கம் மட்டும் உள்ளது.
ஹோண்டா அகார்டு கார் மற்றும் 1.1 கோடியில் மற்றொரு சொகுசு கார் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாராயணாவுக்கு சொந்தமாக ஒரு கார் மட்டுமே உள்ளது. இவருக்கு நகைகள் சுத்தமாக கிடையாது.

குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.669 கோடி என்று வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரத்தில் அமைச்சர் நாராயணா தெரிவித்துள்ளார்.