அமராவதி:

ந்திர மாநிலத்தில் அதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, மாநிலத்தில்  உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவலகங் களுக்கும் ஆளும் கட்சி கொடியின் வண்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கட்சி கலர் பூசப்படும் காட்சி –  சர்ச்சைக்கு பிறகு வெள்ளையாக காட்சி அளிக்கும் பஞ்சாயத்து அலுவலகம்

பஞ்சாயத்து அலுவலகங்களில் கட்சியின் வண்ணம் பூசப்பட்டு வரும் நிலையில், ஒரு பஞ்சாயத்து அலுவலகத்தில் வரையப்பட்டிருந்த தேசியக்கொடியின் கலர் மற்றும் சின்னம் அழிக்கப்பட்டு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வண்ணம் பூசப்பட்டு வருகிறது. இது தேசியவாதிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்து வரும் ஆட்சி செய்யும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் பச்சை, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் வண்ணம் பூச வேண்டும் என இரண்டு மாதங்களுக்கு முன்னர்  உத்தரவு பிறப்பித்தது.

அதைத் தொடர்ந்து, தற்போது  அனைத்து பஞ்சாயத்து அலுவலங்களுக்கும் பச்சை, நீலம், வெள்ளை வண்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தம்மடாபல்லி என்ற பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து அலுவலகத்திலும் வண்ணம் பூசும் பணி நடைபெற்றது. அத்துடன் அலுவலகத்தின் சுவரில் இருந்த தேசியக் கொடியின் மீதும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் பூசப்பட்டிருந்த கட்சியின் வண்ணத்தை அழித்து விட்டு, வெறும் வெள்ளைநிறத்தில் வர்ணம் பூசப்பட்டது.

இதுகுறித்து   மாவட்ட ஆட்சியர் எஸ்.சத்யநாராயணா, பஞ்சாயத்து செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, அவரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.