ஹத்ராஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகிரார் நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி.சிங்

புதுடெல்லி:

த்ராஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜராக உள்ளார்.

2012 நிர்பயா வழக்கில் அனைத்து குற்றவாளிகள் வழக்கிலும் போராடிய வழக்கறிஞர் ஏ.பி.சிங், நாடு தழுவிய போராட்டங்களை ஏற்படுத்திய ஹத்ராஸ் கும்பல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாட உள்ளார்.

ஹத்ராஸ் கும்பல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற உயர் சாதி அமைப்பான அகில் பாரதிய க்ஷத்ரிய மகாசபா ஏ.பி.சிங்கை நியமித்துள்ளது. அகத் பாரதிய க்ஷத்திரிய மகாசபாவின் தேசியத் தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மன்வேந்திர சிங், ஹத்ராஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகுமாறு ஏபி சிங்கிடம் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏபி சிங்கின் கட்டணத்தை செலுத்த நிறைய பணம் சேகரிக்கப்பட்டுள்ளது என்று ராஜா மன்வேந்திர சிங் கூறியுள்ளார்.

ஹத்ராஸ் வழக்கின் மூலம், எஸ்சி-எஸ்டி சமூகம் உயர் சாதி சமூகத்தை கேவலப்படுத்த “தவறாக” பயன்படுத்தப்படுகிறது என்றும், இது குறிப்பாக ராஜ்புத் சமூகத்தை பாதித்துள்ளது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்பயா வழக்கில், அனைத்து குற்றாவாளிகளுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர், ஏ.பி.சிங், ஹத்ராஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக வழக்கறிஞராகப் வாதாட உள்ளார்.

“இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தரப்பினருக்கு உண்மையை வெளிக்கொணர ஏபி சிங் இந்த வழக்கை வாதிடுவார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஹத்ராஸ் கும்பல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் “பாரபட்சமில்லாத” விசாரணையை கோரும் உயர் சாதிக் குழுக்களின் ஆதரவைப் பெற்று வருகின்றனர். கடந்த வாரம், சவர்ன் சமாஜ் (உயர் சாதி சமூகம்) உடன் இணைந்த தொழிலாளர்கள் 19 வயது தலித் சிறுமியை கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆண்களுக்கு நீதி கோரி ஹத்ராஸில் தர்ணா நடத்தினர். போலீஸ் காவலில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு ஆதரவாக ஒரு பஞ்சாயத்தும் நடைபெற்றது.

உத்தரபிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) இந்த விஷயத்தில் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு தர்ணாவின் போது அழைப்பு விடுக்கப்பட்டது. எங்கள் குழந்தைகள் குற்றவாளிகள் என்றால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், ஒரு தரப்பினரும், “குற்றமற்றவர்களை தண்டிக்க கூடாது என்று ஒரு தரப்பினரும் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஹத்ராஸில் உள்ள முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வின் வீட்டிற்கு வெளியே ஏராளமானோர் ஒரு கூட்டத்தை நடத்தினர், அங்கு அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாத்து, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரினர்.

பாதிக்கப்பட்ட கிராமத்திலிருந்து 8-9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முன்னாள் பாஜக எம்எல்ஏ ராஜ்வீர் சிங் பெஹால்வனின் இல்லத்திற்கு அருகே பலத்த போலீஸ் பாதுபாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கூட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும் பெஹல்வனின் மகன் மன்வீர் சிங்கும் கூட்டத்தில் உயர் சாதியினரைச் சேர்ந்தவர்கள் இருப்பதை மறுத்து அவர்கள் “சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்” என்று கூறியுள்ளனர்.