டெல்லி: பிரபல நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் மெமரி கார்டில் உள்ளவற்றை பார்க்க மலையாள நடிகர் திலீப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

2017ம் ஆண்டு, பிரபல நடிகை ஒருவர் ஓடும் காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பரபரப்பு புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

சதி திட்டம் தீட்டியவர் என்ற அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பிறகு, 2 மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் ரிலீசானார்.

இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் முக்கிய ஆவணமாக குறிப்பிடப்படும் மெமரி காரில் உள்ள காட்சிகளை பார்க்க வேண்டும் என்றும், அதன் நகலை தரவேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வீடியோ காட்சிகளை காண மட்டுமே அனுமதி வழங்கி இருக்கிறது. அதன் நகலை தருமாறு கூறி ஆணையிட வில்லை. சிஆர்பிசியின் படி, ஆவணமாக கருதப் படுவதால் தர வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.