சம்மன், நோட்டீசுகளை வாட்ஸ் ஆப், டெலிகிராம் வாயிலாக அனுப்பலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வழக்குகளின், ‘சம்மன்’ மற்றும் நோட்டீஸ்களை சம்பந்தபட்டவர்களுக்கு, ‘வாட்ஸ் ஆப்’ மற்றும் டெலிகிராம் வாயிலாக அனுப்ப, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான நீதிமன்ற அமர்வு, நோட்டீஸ், சம்மன் மற்றும் மனுக்கள் ஆகியவற்றை அனுப்ப தபால் நிலையங்களுக்கு செல்வது சாத்தியமில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.

இதையடுத்து நீதிபதிகள் ஏ எஸ் போபண்ணா மற்றும் ஆர் சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய நீதிமன்ற பிரிவு, வாட்ஸ்அப், மற்றும் பிற தொலைபேசி மெசஞ்சர் சேவைகள் மூலம் நோட்டீஸ் மற்றும் சம்மன் அனுப்பப்பட்ட அதே நாளில் இ மெயிலும் அனுப்பப்பட வேண்டும் என்று கூறியது.

2  ஊதாக்கலர், டிக் குறியீடு காணப்பட்டால், வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பப்பட்ட சம்மனை, உரிய நபர் பார்த்து விட்டார் என்பது அர்த்தம்.  காசோலைகளின் செல்லும் தேதிகளை நீட்டிக்க, ரிசர்வ் வங்கிக்கு அனுமதி அளித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.