புதுடெல்லி: கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களின் மனுக்களை வேண்டுகோளின் அடிப்படையில் பட்டியலிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி தங்களை கர்நாடக சட்டசபை சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர் அந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்.

தங்களின் மனுக்கள் விரைந்து விசாரணைக்கு வரும் வகையில் அவற்றைப் பட்டியலிட வேண்டுகோள் விடுத்திருந்தனர் அவர்கள். ஆனால், அவர்களின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.

“விசாரணைக்கு வரும். இதில் ஏன் அவசரம்?” என்று மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதியிடம் கேள்வி எழுப்பினார் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா.

வழக்கறிஞர் திவிவேதி, செப்டம்பர் 16ம் தேதி அந்த மனுக்கள் விசாரணைக்கு வரும் வகையில் பட்டியலிடக் கோரினார். ஆனால், பின்னர் அது காரணம் கூறப்படாமல் நீக்கப்பட்டது.