சென்னை:
ட்சியில்   “எழுச்சியுடன் இன்று நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்க, அப்பல்லோவாசலில் காத்திருக்கிறார் ஈ..வி.கே.எஸ். இளங்கோவன்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் காட்சி தொண்டர்கள் குமுறுகிறார்கள்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் நம்மிடம் பேசியதன் தொகுப்பு:
“ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது மாற்று அணி தலைவர்கள் பலரை உதாசீனப்படுத்துவதில் குறியாக இருந்தார்.  அவர்களும் பதிலுக்கு இவரை எப்படி தலைமைப்பதவியில் இருந்து வீழ்த்தலாம் என்ற திட்டத்திலேயே இருந்தார்கள்.
இன்னொரு புறம், தேவையின்றி முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் கட்சிக்கும் கெட்டப்பெயரை ஏற்படுத்தினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
இதனால் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு வீழ்ச்சியே ஏற்பட்டது.  கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களின் போதும் கோஷ்டி மோதலே தலைதூக்கியிருந்தது. பெரும் தோல்வியும் கிடைத்தது.
ஆனால் சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டதும் தொண்டர்களிடையே புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
தனது நீண்ட  அரசியல் பயணத்தில் இதுவரை ஊழல் குற்றச்சாட்டிற்கோ, நாகரீகக்குறைவாக பேசினார் என்றோ சொல்லமுடியாத படி, தரமான தலைவராக விளங்குகிறார் திருநாவுக்கரசர். மற்ற கட்சி பிரமுகர்களிடமும் மரியாதைக்குரிய தலைவராக பழகுகிறார்.

அப்பல்லோ வாசலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் - திருநாவுக்கரசர் தலைமையில் உண்ணாவிரதம்
அப்பல்லோ வாசலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் – திருநாவுக்கரசர் தலைமையில் உண்ணாவிரதம்

முதல்வர் ஜெயலலிதா உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்று எண்ணாமல், காங். துணைத்தலைவர் ராகுல்காந்தியை அழைத்து வந்து நலம் விசாரிக்க வைத்தார். இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் இமேஜ் உயர்ந்துள்ளது.
மேலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்தார்.
இவர் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் போராட்டம் இது. கோஷ்டி மனப்பான்மையை ஒழிக்கும் முகமாக, அனைத்து தரப்பு தலைவர்களிடமும் பேசி இந்த போராட்டத்தை அறிவித்தார்.
அதற்கேற்ப இன்று காலை திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது. பெருந்திரளான தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.
ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தனக்கு உடல் நலம் இல்லை என்பதால் கலந்துகொள்ளவில்லை என்று நேற்று செய்தி அனுப்பினார். ஆனால் இன்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலத்தை விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.
திரும்ப வந்து, “முதல்வரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். அவர் பூரண நலமடைய வாழ்த்துகள்” என்று செய்தியாளர்களிடம் புன்னகையுடன் தெரிவித்திருக்கிறார்.
இது மகிழ்ச்சியன விசயம்தான்.
ஆனால்.. இவருக்கு முன்பே தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், அகில இந்திய காங்கிரஸ்கமிட்டி துணைத்தலைவர் ராகுல்காந்தியும் அப்பல்லோ மருத்துமனை சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து வாழ்த்தும் தெரிவித்து வந்துவிட்டனரே!
ஈ.வி.கே.எஸ். அப்பல்லோ போக இன்றைய நாளை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன? நேற்றுவரை அவருக்கு இந்த எண்ணம் தோன்றவில்லையா?  அல்லது நாளை சென்று ஜெயலலிதாவை நலம் விசாரிக்கக்கூடாதா?
மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் எழுச்சியுடன் உண்ணாவிரதம் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் ஜெயலலிதாவை இவர் சென்று சந்திக்க வேண்டுமா?
உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து மக்களை திசை திருப்பும் நோக்கத்தில்தானே இப்படி செயல்பட்டிருக்கிறார் இளங்கோவன்?
இது கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாகாதா?”  என்று சரமாரியாக கேள்விகளை எழுப்புகிறார்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தொண்டர்கள்.
மேலும், “அப்பல்லோவில் இளங்கோவனுக்கும் உடனடியான அனுமதியும் கிடைக்கவில்லை. அரைமணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டார். இது அவருக்கு மட்டுமல்ல.. காங்கிரஸ் கட்சிக்கும் அவமானம்தானே!” என்று கூறும் தொண்டர்கள், “இதே இளங்கோவன் தலைவராக இருந்தபோது, கோஷ்டி மோதல் ஏற்படாதவாறு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆயிரம் முறை சொல்லியிருப்பார். இப்போது இவரே கோஷ்டி மோதலை உருவாக்கும்படி நடந்துகொள்ளலாமா” என்றும் கேட்கின்றனர் தொண்டர்கள்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் பதில் சொல்ல வேண்டும்!