அப்போல்லோவிலிருந்து தகவல்கள் திருடப்பட்டதா?

--

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மருத்துவ தகவல்கள் மற்றும் அதிமுகவினர் சிலருடைய போன் பேச்சுக்களையும் ஹேக் செய்துள்ளதாக லிஜியன் என்ற ஹேக்கர் குழு தெரிவித்துள்ளது.

லிஜியன் எனற ஹேக்கர் குழு உறுப்பினர் “பாக்டர் டெய்லி” என்ற இணையதள நிருபருக்கு கொடுத்த பிரத்தியேக பேட்டியில் அபோல்லோ மருத்துவமனை என்று குறிப்பிடாமல் தென்னிந்தியாவில் பல சர்வர்களிளிருந்து தகவல்களை பெற்றுள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.

கணினி துறையை சார்ந்த நிபுணர் ஒருவர் இதை பற்றி கூறும்போது அபோல்லோ போன்ற பெரிய மருத்துவமனைகள் தங்களது மருத்துவமனைகளை இணைக்க தனியாக இன்ப்ராநெட் வைத்திருப்பார்கள். மேலும் அனைத்து தகவல்களும் encrypt செய்யப்பட்டே இருக்கும். இவைகளை வெளியிலிருந்து இணைத்து தகவல்களை பெறுவதென்பது முடியாது. அப்படி இருக்கும் போது தகவல்களை பல்வேறு சர்வர்களில் இருந்து எடுத்துள்ளோம் என கூறியிருப்பது சந்தேகமாக உள்ளது. இது ஒரு சிலரின் விளம்பரத்திற்காக கொடுக்கப்பட்ட பேட்டியாக கூட இருக்கலாம் என்றார்.

அதே பேட்டியில் தாங்கள் பல இந்திய பிரபலங்களின் தகவல்களை ஹேக் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் sansad.nic.in என்ற மத்திய அரசின் ஈமெயில் சர்வர்களையும் ஹேக் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

source: http://factordaily.com/factordaily-interview-legion/