சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் முக்கிய போட்டியாளராக பங்கேற்று வருகிறார் ஆரி.

எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான்,அலேகா,பகவான் உள்ளிட்ட சில சில படங்களில் நடித்துள்ளார் ஆரி,இதில் சில படங்கள் ரிலீஸிற்கும் தயாராக உள்ளன.

ஆரியின் பகவான் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்,மற்றும் அலேகா படத்தின் டீஸர் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இவரது ஏலியன் படமான எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான் என்ற படத்தின் சூப்பர்ஹீரோ வீடியோ பாடல் ப்ரோமோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் சீடரான அபின் ஹரிஹரன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் தடம் பட நாயகி வித்யா பிரதீப் ஜோடியாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகர் ஆரி ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்தப்படத்தில் ஆரிக்கு வில்லனாக ஜிமிக்கி கம்மல் பிரபலம் அப்பாணி சரத் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் இருந்த ஸ்டெர்லின் சத்யா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.