மணல் குவாரிகள் மூடும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

மதுரை:

மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை 6 மாத காலத்திற்கு மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

ஓரிரு நாளில் இதன் மீது விசாரணை நடைபெற வாய்ப்புள்ளது.