சென்னை:

த்திவரதர் தரிசனம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில்,  அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மனுவாக தாக்கல் செய்தால் பரிசீலிப்பதாக நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

40ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காஞ்சி புரம் அத்திவரதர் கடந்த ஜூலை 1ந்தேதி முதல் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். அவரை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவரது தரிசன காலம் வரும் 15ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், அத்திவரதரை இன்னும் ஏராளமானோர் தரிசிக்க வேண்டியிருப்பதால் மேலும் 48 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது அத்திவரதர் வைபவம் முடிய குறைவான நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்பதால் அத்திவரதர் வைபவத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது.

. இது தொடர்பாக  மனுவாக தாக்கல் செய்தால் விசாரனைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி ஆதிகேசவலு அமர்வு  தெரிவித்து உள்ளது.