சபரிமலை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு? தேவசம் போர்டு உறுப்பினர்கள் ஆலோசனை

--

திருவனந்தபுரம் :

பரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில்,  தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாச சபரிமலை  தேவசம் போர்ட்டு தலைவர் மற்றும்  உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சபரிமலை தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார்

பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதி மன்றம்  தீர்ப்பு கூறியது.

இது நாடு முழுவதும் இந்துக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு தலைவர் பத்ம குமார், “உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்,   தீர்ப்பு குறித்து  திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில்  உறுப்பினர்கள்   ஆலோசனை நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வுமனு தாக்கல் செய்யலாமா என விவாதம் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.