அயோத்தி நில விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

டில்லி:

ர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் விசாரிக்கப்படும் என்று தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு ஏற்கனவே கூறியிருந்த நிலையில், உடனே விசாரிக்க கோரி அகில பாரத இந்து மகா சபா அமைப்பு சார்பில்வ வழக்கறிஞர் பருன்குமார் சின்ஹா அவசர வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணை ஏற்கனவே அறிவித்தபடி ஜனவரியில் நடைபெறும் என்று தள்ளுபடி செய்தனர்.

சர்க்க்குரிய அயோத்தி ராமர் கோவில் இடம் தொடர்பான வழக்கில்,  கடந்த செப்டம்பர் 27ந்தேதி அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, வழக்கை  அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற  மறுப்பு  தெரிவித்து,  3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரும் அக்டோபர் மாதம்29ந்தேதி முதல்  விசாரித்து தீர்ப்பளிக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 29ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ஜனவரி 2019க்கு தள்ளி வைத்து, இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்பட 3 நீதிபதிகள் அமர்வு ஒத்தி வைத்தது.

அதைத்தொடர்ந்து, அவசர வழக்காக உடனே விசாரிக்க கோரிய மனு தள்ளுபோது தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.