நிர்வாணமாக தோன்றுவேன் என்ற பாக். காண்டீல் பலோச்  கொலை

இஸ்லாமாபாத்:

டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாணமாக தோன்றுவேன் என்று அதிரடியாக அறிவித்த பாகிஸ்தான் மாடல் அழகி கொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தானை சேர்ந்த மாடல் அழகி காண்டில் பலோச்  பல விளம்பரங்களில் மாடலாக பணியாற்றி வந்தவர். ஒருசில சர்ச்சைக்குறிய காட்சிகளிலும் நடித்தவர். மற்றும் முப்தி அப்துல் கவி என்ற மதகுருவுடன் செல்பி எடுத்து அதை பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

பாகிஸ்தான் மாடல் அழகி
                            பாகிஸ்தான் மாடல் அழகி

நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாணமாகத் தோன்றுவேன் என பாக். கேப்டன்  அப்ரிடிக்கு செய்தி அனுப்பி அதிரசெய்தவர் அழகி காண்டீல் பலோச். விவாகரத்தான இவர் தனது ஒரே மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இவரது இது மாதிரியான செயல் பாகிஸ்தான் பழமைவாதிகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இது இஸ்லாத்துக்கு விரோதமானது என கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காண்டில் இதுபோன்ற விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை. மாடல் அழகி காண்டில் பலோச்சின் இதுபோன்ற செயல்களால் அவரது குடும்ப மானம் பறி போய்விட்டதாக அவரது சகோதரர் கூறினார்.

இதன் காரணமாகவே  காண்டில் பலோச்   அவரது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன.

சுதந்திரமான கருத்துக்களை கொண்ட அழகிய இளம்பெண் ஒருவர் அநியாயமாக கொல்லப்பட்டு விட்டதாக பாக்கை சேர்ந்த மகளிர் உரிமைக் கழகம் கருத்து தெரிவித்துள்ளது.

அதேபோல், பிரபல மத பண்டிதர் காலித் ரஷீத், காண்டீல் கொலை செய்யப்பட்டிருப்பது இஸ்லாமியத்தின் பார்வையில் மிகப்பெரிய குற்றம் என்று கூறினார். இது பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பதற்கும் இது எடுத்துக்காட்டு  என்றார்.