பேஸ்புக் , கூகிள் நிறுவனங்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி போட்டி!

பிரபலமான செயலிகளை நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் பார்த்திருப்பீர்கள் ,  அந்த செயலியிலோ அல்லது இணையத்தளத்திலோ பதிவு செய்ய கூகிள் அல்லது பேஸ்புக் மின்னஞ்சல் முகவரியை கேட்டு இருப்பார்கள். அவ்வாறு பிரபல நிறுவனத்தின் பதிவு செய்வதை மூன்றாம் நிறுவன பதிவு ( ) என்றழைப்போம்

ஆப்பிள் WWDC 2019 நிகழ்வில்  Sign In with Apple  என்ற வசதியை ஆப்பிள் நிறுவனம் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு  நிரலாளர்களுக்க மிகுந்த உற்சாகமளிக்கிறது. ஏனெனில் கூகிள் நிறுவனத்தின் லாகின் வசதியையும், பேஸ்புக் நிறுவனத் தின் லாகின் வசதியையும் பயன்படுத்துமபோது பயனாளர்களின் தகவல்களை பொறுத்து இரண்டு நிறுவனங்களும் தங்கள் விளம்பரங்களை காட்டி வந்தன. குறிப்பாக பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை மறைமுகமாக எடுப்பதாக குற்றச்சாட்டுகள் உண்டு.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு கூகிள் , பேஸ்புக் நிறுவனத்திற்கு விடப்பட்ட நேரடி சவலாகவும் கருதலாம். ஏனெனில் ஆப்பிள் நிறுவனம்   Sign In with Apple சேவையை பயனாளர்களிடம் இருந்து குறைந்த தகவல்களை மட்டுமே பெற்று பாதுகாப்பான லாகின் வசதியை கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக பயனாளர்களின் மின்னஞ்சல் முகவரியை கூட நிறுவனங்கள் அறியாத வண்ணம் கொடுப்பதாக தெரிவித்துள்ளது இந்த வசதிக்காகவே எல்லா செயலிகளும், இணையத்தளங்களும் ஆப்பிள் நிறுவனத்தின்  Sign In with Apple சேவையை பயன்படுத்தும்

-செல்வமுரளி

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: apple, Facebook, goovle
-=-