ஆப்பிள் ஐபோன் 11 செப்டம்பர் 10 வெளீயீடு?

பிரபலமான செல்பேசி நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11 செல்பேசியை செப்டம்பர் 10 ம் தேதி வெளியிட உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் சென்றுகொண்டிருந்த நிலை யில்  ஐஎஸ் பீட்டா பதிப்பில் உள்ள தேதி மூலம் செப்டம்பர் 10ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் உறுதியாக அனுமானத்தின் அடிப்படையில் தெரிகின்றன

ஆப்பிளின் சமீபத்திய iOS 13 பீட்டா  பதிப்பில் இயங்குதளத்தின் தேதி செப்டம்பர் 10 தேதியைக் காட்டியது,  ஐபோன் 11 க்கான செப்டம்பர் 10 வெளியீட்டின் முந்தைய வதந்திகளை இந்த தேதி உறுதிப்படுத்துகிறது. ஆப்பிள் பாரம்பரியமாக செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது, இந்த விஷயத்தில் இது செப்டம்பர் 10ம் தேதியும் செவ்வாய்க்கிழமை ஆகும்.

எனவே இந்த அனுமானத்தின் அடிப்படையில் செப்டம்பர் 10ம் தேதி iOS 13 வெளியிடப்படலாம் என்று தெரிகிறது

-செல்வமுரளி

கார்ட்டூன் கேலரி